ADDED : ஜூலை 20, 2024 02:26 AM
ப.வேலுார்:ஜேடர்பாளையம் அருகே, பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்று பகுதியில், நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காவிரி ஆற்றில் இருந்த மணலை மினி ஆட்டோவில் அள்ளிக்கொணடிருந்த பிலிக்கல்பாளையத்தை சேர்ந்த ராஜபூபதி மகன் திலீப்குமாரை, 26, பிடித்து விசாரித்தனர். அப்போது, மினி ஆட்டோவில் பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தொடர்ந்து மணல் திருடியது தெரிய வந்தது. ஜேடர்பாளையம் போலீசார், திலிப் குமாரை கைது செய்து மினி ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.