/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 2026 தேர்தலில் தி.மு.க., ஆட்சியை அகற்றுவதே பா.ஜ.,வின் குறிக்கோள்' 2026 தேர்தலில் தி.மு.க., ஆட்சியை அகற்றுவதே பா.ஜ.,வின் குறிக்கோள்'
2026 தேர்தலில் தி.மு.க., ஆட்சியை அகற்றுவதே பா.ஜ.,வின் குறிக்கோள்'
2026 தேர்தலில் தி.மு.க., ஆட்சியை அகற்றுவதே பா.ஜ.,வின் குறிக்கோள்'
2026 தேர்தலில் தி.மு.க., ஆட்சியை அகற்றுவதே பா.ஜ.,வின் குறிக்கோள்'
ADDED : ஜூலை 20, 2024 02:26 AM
கரூர்:''வரும், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சியை அகற்றுவதே, பா.ஜ.,வின் குறிக்கோள்,'' என, தமிழக பா.ஜ., பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்தார்.கரூர் மாவட்ட, பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில், எம்.பி., தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டம், வேலாயுதம்பாளையத்தில் நேற்று இரவு நடந்தது.
அதில் மாநில, பா.ஜ., பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் பேசியதாவது:கடந்த, 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த, மக்கள் நலத்திட்டங்கள் காரணமாகவே, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க முடிந்தது. அதில், வீடுதோறும் கழிப்பறை, ஜல்ஜீவன் திட்டத்தில் வீடு தோறும் குடிநீர் வசதி, முத்ரா கடனுதவி உள்ளிட்ட பல திட்டங்கள் முக்கியமானவை. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முதல்வராக இருந்த போது, தமிழகம் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்திருப்பதாக, முதல்வர் ஸ்டாலின் பேசினார். தற்போது, மூன்றாண்டு கால தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தின் கடன் எட்டரை லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது.இதனால்தான் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உள்ளிட்டவைகளை தமிழக மக்கள் மீது, தி.மு.க., அரசு விதிக்கிறது. தி.மு.க., ஆட்சியில் அனைத்து ஒப்பந்த பணிகளுக்கும், 30 சதவீதம் கமிஷன் கேட்பதாக தகவல் வருகிறது.அப்படி என்றால், மூன்று ஆண்டுகளில் வாங்கிய கடன், மூன்று லட்சம் கோடி ரூபாயில், 90 ஆயிரம் கோடி ரூபாய் யாருக்கு போனது. வரும் சட்டசபை தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என, தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். அந்த வேலை இனி நடக்காது.எமர்ஜென்சி காலத்தில் ஒரு லட்சத்து, 25 ஆயிரம் பேர் சிறை சென்றனர். அதில், 25 ஆயிரம் பேர் மட்டுமே தி.மு.க., கம்யூ., உள்ளிட்ட பிற கட்சிகள் உள்ளனர். மீதமுள்ள ஒரு லட்சம் பேர் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஜனசங்கத்தை சேர்ந்தவர்கள்.கரூரை சேர்ந்த தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், இரண்டு பேர் தற்போது சிறையில் உள்ளனர். அவர்கள் மீண்டும், பணத்தை நம்பி தேர்தலில் போட்டியிடுவர். வரும், 2026 சட்டசபை தேர்தலில், மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை, அகற்றுவதே பா.ஜ.,வின் குறிக்கோள். 234 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும்.இவ்வாறு பேசினார்.மாநில பா.ஜ., துணைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் செல்வராஜ், இளைஞர் அணி தலைவர் தீனசேனன், வக்கீல் அணி தலைவர் உமாதேவி, நகர தலைவர் கோபிநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.