/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : ஜூலை 03, 2024 03:07 AM
கிருஷ்ணராயபுரம்;கள்ளப்பள்ளி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.இதில், மாநில அரசு அறிவித்துள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம், பயானாளிகள் தேர்வு குறித்து கிராம சபை கூட்டத்தில் பேசப்பட்டது.
மேலும் அடிப்படை வசதிகள் தேவை குறித்து மக்கள் கோரிக்கை விடுத்தனர்.* கிருஷ்ணராயபுரம் அடுத்த திருக்காம்புலியூர் பஞ்சாயத்து, மேட்டுத்திருக்காம்புலியூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து பேசப்பட்டது.* பிள்ளபாளையம் பஞ்சாயத்து, வீரகுமாரன்பட்டி கிராமத்தில் பஞ்., தலைவர் அம்சவள்ளி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் பால அபிராமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.* கருப்பத்துார் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்துக்கு, பஞ்., தலைவர் ரெங்கம்மாள் தலைமை வகித்தார். வார்டு உறுப்பினர்கள், யூனியன் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.*வயலுார் பஞ்சாயத்தில் நடந்த கூட்டத்துக்கு, பஞ்., தலைவர் ரேவதி தலைமை வகித்தார்.