/உள்ளூர் செய்திகள்/கரூர்/ க.பரமத்தியில் மாற்றுதிறனாளி பயனாளிகள் தேர்வு முகாம் க.பரமத்தியில் மாற்றுதிறனாளி பயனாளிகள் தேர்வு முகாம்
க.பரமத்தியில் மாற்றுதிறனாளி பயனாளிகள் தேர்வு முகாம்
க.பரமத்தியில் மாற்றுதிறனாளி பயனாளிகள் தேர்வு முகாம்
க.பரமத்தியில் மாற்றுதிறனாளி பயனாளிகள் தேர்வு முகாம்
ADDED : மார் 12, 2025 07:55 AM
கரூர்: க.பரமத்தியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் இணைந்து நடத்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், பயனாளிகள் தேர்வு முகாம் நடந்தது.
கரூர் எம்.பி.,ஜோதிமணி தொடங்கி வைத்தார். முட நீக்கு சாதனம், செயற்கைகால், கை, மடக்கு சக்கரநாற்காலி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ரோலேட்டர், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சி சாதனம், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச், காதொலி கருவி போன்ற உபகரணங்கள் டாக்டர்களின் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உபகரணங்கள் அளிக்கப்படும்.
நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் மோகன்ராஜ், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.