/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
ADDED : மார் 12, 2025 07:55 AM
கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மாவட்ட செயலருமான விஜயபாஸ்கர், கரூர் கலெக்டர் தங்கவேலிடம் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில், 5,063 பேர்களின் இரட்டை பதிவு, முகவரி தெரியாத வாக்காளர்கள், இறப்பு ஆகிய பெயர்களை நீக்க வேண்டும் என மனு அளித்திருந்தோம். ஆனால், 4,420 பெயர்கள் இன்னும் நீக்கம் செய்யப்படாமல் உள்ளது. கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், ஈரோடு பிரிவு சாலை நடுவில், புதிதாக உயர்மின் விளக்கு அமைக்க போடப்பட்டுள்ள கான்கிரீட் தளம் சாலையில், ஒரு அடி உயரத்தில் ஆபத்து விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் - கோவை சாலையில் இடதுபுறம் உள்ள வாய்க்கால் பாலத்தின் அருகே, சாலை மற்றும் அதன் ஓரங்களில் குழிகளாக உள்ளது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கான்கிரீட் தளம் மற்றும் குழிகளில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. வயதானவர்கள், பெண்கள் இரு சக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து பயணம் செய்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். இதனை, சரி செய்து உயர்மின் விளக்குகள் அமைக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.