ADDED : ஜூலை 20, 2024 02:33 AM
கரூர்:அமரர் வைரப்பெருமாள் நினைவு, 53வது ஆண்டு சாதா புறா போட்டிகள், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில், நேற்று கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது.அதில், 15 க்கும் மேற்பட்ட சாதா புறாக்களை வளர்த்தவர்கள் கொண்டு வந்தனர்.
போட்டிகளை கந்தசாமி தொடங்கி வைத்தார். இன்றும், நாளையும் தொடர்ந்து போட்டி நடக்கிறது. வரும் ஆக., 16,17,18 ஆகிய தேதிகளில், கர்ண புறா போட்டிகள் நடக்கிறது.வெற்றி பெறும் புறா வளர்ப்பவர்களுக்கு, 9,001 ரூபாய் முதல் பரிசாக வழங்கப்படுகிறது.