/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அம்மன் கோவில் திருவிழா: இரு தரப்பு மீது வழக்கு அம்மன் கோவில் திருவிழா: இரு தரப்பு மீது வழக்கு
அம்மன் கோவில் திருவிழா: இரு தரப்பு மீது வழக்கு
அம்மன் கோவில் திருவிழா: இரு தரப்பு மீது வழக்கு
அம்மன் கோவில் திருவிழா: இரு தரப்பு மீது வழக்கு
ADDED : ஜூலை 20, 2024 02:32 AM
குளித்தலை,:குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா, டி.இடையப்பட்டி கிராமத்தில் பகவதி அம்மன், காளியம்மன், பிடாரி அம்மன், ஒண்டிவீரர், முனியப்பன் கோவில்கள் உள்ளன.இங்கு கோவில் திருவிழாவை முன்னிட்டு, இரு தரப்பினர் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.
பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் இரு தரப்பினர் செயல்படுவர் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டி.இடையபட்டி குறிஞ்சி நகரை சேர்ந்த குழந்தையப்பன், 37, சண்முகம், 45, சரவணன், 39, வேம்படி, 55, மற்றொரு தரப்பை சேர்ந்த சக்திவேல், 34, செல்வம், 39, உள்ளிட்ட இரு தரப்பை சேர்ந்த தலா ஒன்பது பேர் மீது, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.