/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வண்டல், களி மண் எடுத்து செல்ல அனுமதி: கரூர் கலெக்டர் அறிவிப்பு வண்டல், களி மண் எடுத்து செல்ல அனுமதி: கரூர் கலெக்டர் அறிவிப்பு
வண்டல், களி மண் எடுத்து செல்ல அனுமதி: கரூர் கலெக்டர் அறிவிப்பு
வண்டல், களி மண் எடுத்து செல்ல அனுமதி: கரூர் கலெக்டர் அறிவிப்பு
வண்டல், களி மண் எடுத்து செல்ல அனுமதி: கரூர் கலெக்டர் அறிவிப்பு
ADDED : ஜூலை 07, 2024 02:49 AM
கரூர்:நீர் நிலைகளில் வண்டல் மண், களி மண் இலவசமாக எடுத்து செல்ல விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், -10, ஊரக வளர்ச்சித்துறையில்,- 40, என மொத்தம் 50 ஏரி, குளம், கண்மாய்கள் உள்ளன. இந்த நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகியவற்றை விவசாய பயன்பாட்டிற்காக, இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும் அல்லது விவசாய குத்தகை பதிவேட்டில், பதிவு செய்யப்பட்டு குத்தகைதாரராக இருக்க வேண்டும். புல எண், நில வகைப்பாடு, தேவைப்படும் மண்ணின் அளவு, அனுமதி கோரும் நீர் நிலைகள் ஆகியவற்றின் விவரங்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மண்பாண்ட தொழிலின் உண்மை தன்மை மற்றும் விண்ணப்பதாரரின் வசிப்பிடம் குறித்து, வி.ஏ.ஓ., அலுவலரால் சரிபார்க்கப்பட்டு சான்றளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.