/உள்ளூர் செய்திகள்/கரூர்/ உணவு விற்பனையாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம் உணவு விற்பனையாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம்
உணவு விற்பனையாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம்
உணவு விற்பனையாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம்
உணவு விற்பனையாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம்
ADDED : ஜூலை 07, 2024 02:50 AM
கரூர்:உணவு விற்பனையாளர்கள் அனைவரும், மருத்துவ சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூரில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் சாலையோர உணவு வணிகர்கள், பானிபூரி கடைகள் மற்றும் சவர்மா போன்ற அசைவ உணவு கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களுக்கு வழங்கும் உணவுகளில் நிறம் மூட்டிகள் சேர்க்கக்கூடாது. சாலையோர உணவு வணிகர்கள், பானிபூரி கடைகள் அனைவரும் உணவு பாதுகாப்பு பதிவு சான்று கட்டாயம் பெற்று வணிகம் செய்ய வேண்டும்.
உணவு விற்பனையாளர்கள் அனைவரும், மருத்துவ சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பணியாளர்கள் தலையுறை மற்றும் கையுறை கட்டாயம் அணிய வேண்டும். தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட்ட உணவு வகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் நெகிழி பைகளை விற்பனை செய்யக்கூடாது. விதிமுறை மீறி செயல்படும் கடைகளுக்கு, உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவு பொருள்கள் தொடர்பான புகார்களுக்கு, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையின், 9444042322 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.