/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பயணிகள் நிழற்கூடம் முன் திறந்த நிலை குழியால் அவதி பயணிகள் நிழற்கூடம் முன் திறந்த நிலை குழியால் அவதி
பயணிகள் நிழற்கூடம் முன் திறந்த நிலை குழியால் அவதி
பயணிகள் நிழற்கூடம் முன் திறந்த நிலை குழியால் அவதி
பயணிகள் நிழற்கூடம் முன் திறந்த நிலை குழியால் அவதி
ADDED : ஜூன் 16, 2024 12:59 PM
கரூர்: கரூர் அருகே, பயணிகள் நிழற்கூடம் முன், கழிவுநீர் வாய்க்கால் அமைக்க தோண்டப்பட்ட குழி திறந்த நிலையில் உள்ளது. இதனால், நிழற்கூடத்தை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
கரூர்-வெள்ளியணை சாலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே, பல ஆண்டுகளுக்கு முன், பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டது. தற்போது, நிழற்கூடம் உள்ள சாலையில், புதிதாக கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், நிழற்கூடம் முன் கழிவு நீர் வாய்க்கால் கட்ட தோண்டப்பட்ட குழி, பணிகள் நிறைவு பெற்றும், திறந்த நிலையில் உள்ளது. இதனால், நிழற்கூடத்தை பயணிகள் பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது.
எனவே, பயணிகள் நிழற்கூடம் முன், கழிவு நீர் வாய்க்கால் கட்ட தோண்டப்பட்ட குழியை மூட, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.