/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாணவர்களுக்கு பாடநுால் குறிப்பேடு வழங்கும் பணி மாணவர்களுக்கு பாடநுால் குறிப்பேடு வழங்கும் பணி
மாணவர்களுக்கு பாடநுால் குறிப்பேடு வழங்கும் பணி
மாணவர்களுக்கு பாடநுால் குறிப்பேடு வழங்கும் பணி
மாணவர்களுக்கு பாடநுால் குறிப்பேடு வழங்கும் பணி
ADDED : ஜூன் 16, 2024 01:00 PM
கிருஷ்ணராயபுரம்: மேட்டங்கிணம், அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடநுால் குறிப்பேடுகள் வழங்கும் பணி நடந்தது.
தலைமை ஆசிரியர் மல்லிகா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் இந்தாண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநுால் குறிப்பேடுகள் வழங்கும் பணி நடந்தது.மேலும் சித்த மருத்துவர் சித்ரா, 'சுற்றுசூழல் மன்ற ஏழு தின செயல்பாடுகள்' குறித்தும், இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் பருவகால சீர் கேடுகள் தவிர்க்கலாம் என மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
பள்ளி வளாகத்தில் காய்கறிகள் வளர்ப்பது, இயற்கை உணவு முறைகள் குறித்து கரூர் வேளாண்மை அறிவியல் மையம் தலைவர் திரவியம் எடுத்து கூறினார்.ஆசிரியர்கள், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.