/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நாயை கொன்ற சிறுத்தை டி.என்.பாளையத்தில் பீதி நாயை கொன்ற சிறுத்தை டி.என்.பாளையத்தில் பீதி
நாயை கொன்ற சிறுத்தை டி.என்.பாளையத்தில் பீதி
நாயை கொன்ற சிறுத்தை டி.என்.பாளையத்தில் பீதி
நாயை கொன்ற சிறுத்தை டி.என்.பாளையத்தில் பீதி
ADDED : ஜூன் 12, 2024 06:48 AM
டி.என்.பாளையம் : டி.என்.பாளையத்தை அடுத்த கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். இவற்றை பாதுகாக்க ஒரு வளர்ப்பு நாய் இருந்தது.
நேற்றிரவு வழக்கம் போல் கால்நடைகளை கொட்டகையில் அடைத்து, காவலுக்காக நாயை கட்டி போட்டிருந்தார். நேற்று காலை நாய் இறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்தவர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை பார்த்தபோது, நள்ளிரவில் வந்த சிறுத்தை நாயை தாக்கி கொன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்துக்குள் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தை கொன்றது, அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையை பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.