ADDED : ஜூன் 13, 2024 02:27 AM
குளித்தலை:கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த உப்புகாட்சிபட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் சாலை ஓரத்தில், பிறந்து 30 நிமிடமேயான ஆண் சிசுவின் அழுகை சத்தம் கேட்டு உள்ளது.
அவ்வழியாக சென்றவர்கள், சிசுவை மீட்டு, காவல்காரன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பணியில் இருந்த மருத்துவர் முதலுதவி அளித்து, பின் மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டது. தோகைமலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.