பாதயாத்திரை டிரஸ்ட் 33ம் ஆண்டு விழா
பாதயாத்திரை டிரஸ்ட் 33ம் ஆண்டு விழா
பாதயாத்திரை டிரஸ்ட் 33ம் ஆண்டு விழா
ADDED : ஜூலை 29, 2024 01:46 AM
கரூர்: தத்தகிரி ஆடி கிருத்திகை பாதயாத்திரை டிரஸ்ட் சார்பில், 33ம் ஆண்டு விழா நகரத்தார் சங்க கட்டடத்தில், நேற்று நடந்தது. அதில், 50 பேர் ேஷாபா தலைமையில், திருப்புகழ் பாராயணம் செய்தனர். பின், வெள்ளி வேலுக்கு பல வகையான அபிஷேகம், பூக்கள் அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பூஜையில் வைக்கப்பட்ட, மங்கள பொருட்கள் ஏலம் விடப்பட்-டன. அதில், உப்பு ஒரு கிலோ, 22,000 ரூபாய், சர்க்கரை, கற்-கண்டு, தேங்காய், மஞ்சள் கொத்து ஆகியவை தலா, 7,000 ரூபாய்க்கு ஏலம் போனது.
அன்னதானம் வழங்கப்பட்ட பின், காவடி, வேல், பால் குடத்-துடன் பக்தர்கள் தத்தகிரிக்கு புறப்பட்டனர். நிகழ்ச்சியில், நக-ரத்தார் சங்க தலைவர் செந்தில் நாதன், பொருளாளர் குமரப்பன், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.