/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பாலத்தின் கீழ் பகுதியில் சேதமான சாலையால் ஓட்டுனர்கள் அவதி பாலத்தின் கீழ் பகுதியில் சேதமான சாலையால் ஓட்டுனர்கள் அவதி
பாலத்தின் கீழ் பகுதியில் சேதமான சாலையால் ஓட்டுனர்கள் அவதி
பாலத்தின் கீழ் பகுதியில் சேதமான சாலையால் ஓட்டுனர்கள் அவதி
பாலத்தின் கீழ் பகுதியில் சேதமான சாலையால் ஓட்டுனர்கள் அவதி
ADDED : ஜூன் 17, 2024 01:12 AM
கரூர்: கரூர் அருகே, சுக்காலியூர் ரவுண்டானா பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன
ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாவட்டம், சுக்காலியூர் பகுதியில் திருச்சி, சேலம் மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் இணைகிறது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் சரிவர செல்லும் வகையில், ரவுண்டானா மற்றும் உயர்மட்ட பாலம் கட்ட ப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதி சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது.
எச்சரிக்கை போர்டுகள் உடைந்துள்ளது. இதனால், திருச்சியில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளும், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, திருச்சி செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமப்படுகின்றனர்.
மேலும், அப்பகுதியில் போதிய விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோர் சாலையில் உள்ள குழிகளில் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, சுக்காலியூர் ரவுண்டானாவின் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதிகளில் உள்ள, குண்டும், குழியுமான சாலைகளை சீரமைத்து, சேதமடைந்துள்ள எச்சரிக்கை போர்டுகளை புதிதாக வைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.