/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மின்வாரிய பென்ஷனர் சங்க 5ம் ஆண்டு துவக்க விழா மின்வாரிய பென்ஷனர் சங்க 5ம் ஆண்டு துவக்க விழா
மின்வாரிய பென்ஷனர் சங்க 5ம் ஆண்டு துவக்க விழா
மின்வாரிய பென்ஷனர் சங்க 5ம் ஆண்டு துவக்க விழா
மின்வாரிய பென்ஷனர் சங்க 5ம் ஆண்டு துவக்க விழா
ADDED : ஜூலை 07, 2024 02:48 AM
குளித்தலை:குளித்தலை வைகைநல்லுார் அக்ரஹாரத்தில், மின்வாரிய பென்ஷனர் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா, பேரவை கூட்டம் நடந்தது.
சங்க கொடியை தணிக்கையாளர் பழனியாண்டி ஏற்றினார். சங்க தலைவர் பால பொன்னம்பலம் விழா ஒருங்கிணைப்பு செய்தார். துணைத் தலைவர் பழனிவேலு தலைமை வைத்தார். ஆண்டு அறிக்கையை துணை செயலாளர் கண்ணன் வாசித்தார். நிதிநிலை அறிக்கையை பொருளாளர் மகாலிங்க வாசித்தார்.
மாநில தலைவர் மாணிக்கம், பொதுச்செயலாளர் முத்துக்குமார், திருச்சி மண்டல தலைவர் எஸ்மா ராமசாமி, குளித்தலை வட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, தமிழக அரசு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில், மத்திய அரசின் அறிவிப்புக்கேற்ப ஆறு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் பஞ்சப்படி உயர்வை தமிழக அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து நிலுவைகள் ஏதுமின்றி தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் உரிய கமிட்டி அமைத்து விரைவாக கமிஷனரின் பரிந்துரைகளை பெற்று 2026 முதல் பென்ஷன் உயர்வை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட, 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயலாளர் நரசிங்கம் நன்றி கூறினார்.
செயற்குழு, நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.