/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மூன்று கிராம மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம் மூன்று கிராம மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
மூன்று கிராம மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
மூன்று கிராம மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
மூன்று கிராம மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED : ஜூன் 17, 2024 01:35 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, தலையாரிப்பட்டி, வடக்கு மாடு விழுந்தான் பாறை, வடக்கு கருங்களாப்பள்ளி மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
குளித்தலை அடுத்த, தலையாரிப்பட்டி கிராமத்தில் விநாயகர், மாரியம்மன், காளியம்மன், மாபாம்பலம்மன், கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் புனரமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் பக்தர்கள், குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள், மேளதாளத்துடன் புனித நீர் கும்பத்தை சுமந்து கோவிலை சுற்றி வந்தனர். பிறகு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தீபாராதனை காட்டப்பட்டது, புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்தி சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* நங்கவரம் டவுன் பஞ்., வடக்கு மாடுவிழுந்தான் பாறை கிராமத்தில், காளியம்மன், மாரியம்மன் கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்களுக்கு நேற்று காலை, 8:00 மணியளவில் யாக சாலையில் நான்கு கால பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள், கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
* குளித்தலை அடுத்த, வடக்கு கருங்களாப்பள்ளி கிராமத்தில் மாரியம்மன், விநாயகர், பகவதி அம்மன், மலையாள சுவாமி சங்கிலி கருப்பு பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து, நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்கி புனித நீர் ஊற்றி
கும்பாபி ேஷகம் செய்தனர்.