/உள்ளூர் செய்திகள்/கரூர்/ க.பரமத்தி அருகே கார் கண்ணாடி, குழாய் உடைப்பு: வாலிபர் கைது க.பரமத்தி அருகே கார் கண்ணாடி, குழாய் உடைப்பு: வாலிபர் கைது
க.பரமத்தி அருகே கார் கண்ணாடி, குழாய் உடைப்பு: வாலிபர் கைது
க.பரமத்தி அருகே கார் கண்ணாடி, குழாய் உடைப்பு: வாலிபர் கைது
க.பரமத்தி அருகே கார் கண்ணாடி, குழாய் உடைப்பு: வாலிபர் கைது
ADDED : ஜூன் 17, 2024 01:35 AM
கரூர்: க.பரமத்தி அருகே, கார் கண்ணாடி மற்றும் குடிநீர் குழாயை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே ஆரியூர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா, 63; இவரது பேத்தி அபர்னா, 25, என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ், 30, என்பவருக்கும் கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் தர்மராஜூம், அபர்னாவும் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. அதற்கு, மல்லிகாதான் காரணம் என தர்மராஜூக்கு தெரியவந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த தர்மராஜ் கடந்த, 14ல் மல்லிகா வீட்டுக்கு சென்று, கார் கண்ணாடி, குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதன் மதிப்பு, 23 ஆயிரம் ரூபாய்.
இதுகுறித்து, மல்லிகா கொடுத்த புகார்படி, க.பரமத்தி போலீசார் விசாரித்து தர்மராஜை கைது செய்தனர்.