Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பு.புளியம்பட்டி, சென்னிமலையில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பு.புளியம்பட்டி, சென்னிமலையில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பு.புளியம்பட்டி, சென்னிமலையில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பு.புளியம்பட்டி, சென்னிமலையில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

ADDED : ஜூலை 08, 2024 05:05 AM


Google News
பு.புளியம்பட்டி : புன்செய்புளியம்பட்டியில் மாதம்பாளையம் சாலையில் கருப்-பண்ண சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணி முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக நான்கு கால யாக பூஜையை தொடர்ந்து, மகாபூர்ணாகுதியுடன், வேத மந்-திரங்கள் முழங்க விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.

அதை தொடர்ந்து ராஜகணபதி, கன்னிமார் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் சுற்று-வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்-டனர். பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.சென்னிமலையில்...

சென்னிமலை யூனியன் பனியம்பள்ளி ஊராட்சி கவுண்டம்பா-ளையத்தில், பழமையான முத்து மாரியம்மன் மற்றும் சக்தி விநா-யகர் கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த, 5ம் தேதி துவங்கியது. நேற்று அதிகாலை நான்காம் கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 9:30 மணிக்கு முத்து மாரியம்மன், விநாயகர் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சென்னிமலை ஆதி சைவ அர்ச்சகர்கள் அறக்கட்டளை தலைவர் சிவ ஸ்ரீமதி சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடத்-தப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us