/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பணி மாறுதல் வழங்கியதில் முறைகேடு:ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் பணி மாறுதல் வழங்கியதில் முறைகேடு:ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பணி மாறுதல் வழங்கியதில் முறைகேடு:ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பணி மாறுதல் வழங்கியதில் முறைகேடு:ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பணி மாறுதல் வழங்கியதில் முறைகேடு:ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 03, 2024 03:02 AM
கரூர்;தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணி மாறுதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் தான்தோன்றிமலை அரசு மேல்நிலை பள்ளியில் அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு நேற்று, மாவட்ட கல்வி அலுவலர் ராமநாதன் செட்டி முன்னிலையில் நடந்தது.
அப்போது கலந்தாய்வு நடப்பதற்கு முன் இடமாறுதல் வழங்கப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் கூறியதாவது:கடந்த, ஜூன் 30 வரை, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 4 காலி பணியிடங்கள் இருப்பதாக ஆன்லைனில் தெரிந்தது. நேற்று நடந்த கலந்தாய்வில், 3 இடங்கள் மட்டும் காலி இடம் இருப்பதாக ஆன் லைனில் காட்டியது. இது குறித்து அதிகாரி களிடம் கேட்ட போது, நேற்று (நேற்று முன்தினம்) பொய்கைபுத்துார் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். இன்று (நேற்று) கலந்தாய்வு நடக்கும் நிலையில், எப்படி பணி மாறுதல் வழங்கலாம் என கேட்ட போது, அதற்கு முறையான பதில் இல்லை. இந்த பணி மாறுதலில் முறைகேடு நடந்துள்ளது. உடனடியாக பணி மாறுதலை ரத்து செய்து விட்டு கலந்தாய்வு மூலம் நடத்த வேண்டும்.இவ்வாறு கூறினார்.உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர் சங்கத்தினரிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து, மாவட்ட கல்வி அலுவலர் ராமநாதன் செட்டி கூறுகையில், ''நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஒருவர், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராக பதிவிறக்கம் செய்து தரும்படி விண்ணப்பித்து இருந்தார். அதன்படி தொடக்க கல்வி இணை இயக்குனர் அனுமதியுடன் பொய்கை புத்துார் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஆசிரியர்கள் போராட்டம் குறித்து இணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.