/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாயனுாரில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரம் விதை வழங்கல் மாயனுாரில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரம் விதை வழங்கல்
மாயனுாரில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரம் விதை வழங்கல்
மாயனுாரில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரம் விதை வழங்கல்
மாயனுாரில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரம் விதை வழங்கல்
ADDED : ஜூன் 15, 2024 07:01 AM
கிருஷ்ணராயபுரம்,: மாயனுாரில், விவசாயிகள் கலன் கருதி மாநில முதல்வர் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் துவங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். இந்த திட்டம் மூலம், விவசாயிகளுக்கு பசுந்தாள் உரம் விதை வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை எம்.எல்.ஏ., வழங்கினார். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் வழங்கப்படும் மானியம் குறித்தும் எடுத்து கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வேளாண்மைதுறை இணை இயக்குனர் ரவிசந்திரன், கிருஷ்ணராயபுரம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் அரவிந்தன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி, கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் சுமிந்திரா தேவி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் ரவிராஜா, மாயனுார் பஞ்சாயத்து தலைவர் கற்பகவள்ளி மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.