/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சித்தலவாய் பஞ்சாயத்தில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை சித்தலவாய் பஞ்சாயத்தில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை
சித்தலவாய் பஞ்சாயத்தில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை
சித்தலவாய் பஞ்சாயத்தில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை
சித்தலவாய் பஞ்சாயத்தில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை
ADDED : ஜூன் 14, 2024 01:37 AM
கிருஷ்ணராயபுரம், சித்தலவாய் பஞ்சாயத்து கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, பஞ்., தலைவர் சார்பில், தொகுதி
எம்.எல்.ஏ.,விடம் மனு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட சித்தலவாய் பஞ்., சங்கரமலைப்பட்டியில் ரேஷன் கடை நாடக மேடையில் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் புதிதாக ரேஷன் கடை அமைக்க வேண்டும். மேற்கூரை கொண்ட மயான கொட்டகை அமைக்க வேண்டும். கீளக்கல்பட்டி கிராமத்தில் புதிதாக நாடக மேடை கட்டித்தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்., தலைவர் பழனியப்பன் தலைமையில், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரியிடம் மனு அளித்தனர்.