Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கூட்டுறவு சங்கங்களில் நாளை கடன் மேளா

கூட்டுறவு சங்கங்களில் நாளை கடன் மேளா

கூட்டுறவு சங்கங்களில் நாளை கடன் மேளா

கூட்டுறவு சங்கங்களில் நாளை கடன் மேளா

ADDED : ஜூலை 03, 2024 03:06 AM


Google News
கரூர்;கூட்டுறவு சங்கங்களில் நாளை கடன் மேளா நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் குறைந்த வட்டியில் பொருளாதார மேம்பாட்டிற்கு டாப்செட்கோ கடன், தாட்கோ கடன் போன்றவை செயல்படுத்தப்படுகிறது.

இதில் நாளை (4ம் தேதி) காலை 10:00 மணி முதல், 5:00 மணி வரை, 26 கூட்டுறவு நிறுவனங்களில் கடன் மேளா நடக்கிறது. அதில், கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் புகளூர், வாங்கல், எல்.என்.சமுத்திரம், மேலப்பாளையம், சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, ஆண்டிப்பட்டி, ஈசநத்தம், கருப்பபிள்ளைபுதுார், வைகநல்லுார், டி.மருதுார், இனுங்கூர், தோகைமலை, கீழவெளியூர், கூடலுார், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, சிந்தலவாடி, மணவாசி, டி.மாமரத்துப்பட்டி, பி.உடையாப்பட்டி, சுண்டுகுழிப்பட்டி, காணியாளம்பட்டி, விராலிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கரூர் நகர கூட்டுறவு வங்கி மற்றும் குளித்தலை கூட்டுறவு நகர வங்கியில் கடன் மேளா நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us