/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் லோக்சபா தேர்தலில் 15.81 சதவீத ஓட்டுக்களை இழந்துள்ள காங்., கட்சி கரூர் லோக்சபா தேர்தலில் 15.81 சதவீத ஓட்டுக்களை இழந்துள்ள காங்., கட்சி
கரூர் லோக்சபா தேர்தலில் 15.81 சதவீத ஓட்டுக்களை இழந்துள்ள காங்., கட்சி
கரூர் லோக்சபா தேர்தலில் 15.81 சதவீத ஓட்டுக்களை இழந்துள்ள காங்., கட்சி
கரூர் லோக்சபா தேர்தலில் 15.81 சதவீத ஓட்டுக்களை இழந்துள்ள காங்., கட்சி
ADDED : ஜூன் 06, 2024 01:00 AM
கரூர்:கடந்த லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டுக்களை விட, நடந்து முடிந்த தேர்தலில் காங்.,கட்சி 15.81 சதவீதம் ஓட்டுக்களை இழந்துள்ளது.
கரூர் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில் வேட்பாளர்களாக காங்., ஜோதிமணி, அ.தி.மு.க., தங்கவேல், பா.ஜ., செந்தில்நாதன் போட்டியிட்டனர். இதில், 1.66 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜோதிமணி வெற்றி பெற்றார். இருந்த போதும், கடந்த தேர்தலை விட, தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., ஓட்டு சதவீதம் கடும் சரிவை கண்டுள்ளது.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், காங்.,வேட்பாளர் ஜோதிமணி, 6 லட்சத்து, 95 ஆயிரத்து, 697 ஓட்டுக்களை பெற்றார். அ.தி.மு.க., தம்பிதுரை, 2 லட்சத்து, 75 ஆயிரத்து, 151 ஓட்டுக்கள் பெற்றார். 4 லட்சத்து, 20 ஆயிரத்து, 546 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜோதிமணி வெற்றி பெற்றார். ஓட்டு சதவீதம் அடிப்படையில் காங்., 63.06 சதவீதம், தம்பிதுரை 24.94 சதவீதம் பெற்றனர்.
இந்த தேர்தலில் காங்., ஜோதிமணி, 5 லட்சத்து, 34 ஆயிரத்து, 906 ஓட்டுக்களையும், அ.தி.மு.க., தங்கவேல், 3 லட்சத்து, 68 ஆயிரத்து, 90 ஓட்டுக்களையும், பா.ஜ., 1 லட்சத்து, 2,482 ஓட்டுக்களையும், நாம் தமிழர் கட்சி, 87 ஆயிரத்து, 503 ஓட்டுக்களையும் பெற்றனர். அதில், 1 லட்சத்து, 66 ஆயிரத்து, 816 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., விட கூடுதலாக பெற்று காங்., வெற்றி பெற்றுள்ளது.
காங்., 47.25 சதவீதம், அ.தி.மு.க., 32.52 சதவீதம், பா.ஜ. 9.05 சதவீதம், நாம் தமிழர், 7.73 சதவீதம் ஓட்டுக்கள் பெற்றுள்ளது. 2019 தேர்தலில் பெற்ற ஓட்டுக்களை விட காங்., 15.81 சதவீதம் ஓட்டுக்களை இழந்துள்ளது. மாறாக, 7.58 சதவீதம் ஓட்டுக்களை, அ.தி.மு.க., கூடுதலாக பெற்றுள்ளது.