/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளித்தலை அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் குளித்தலை அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குளித்தலை அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குளித்தலை அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குளித்தலை அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : ஜூன் 05, 2024 06:30 AM
கரூர் : குளித்தலை அருகே, மறைத்து வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், எஸ்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் இரவு, குளித்தலை தெப்பக்குளம் தெரு உழவர் சந்தை அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில், 21 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 1,050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக திருச்சியை சேர்ந்த நாசர், 45, என்பவரை போலீசார் கைது செய்தனர்.