/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அப்துல்கலாம் நினைவு தினம் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல் அப்துல்கலாம் நினைவு தினம் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்
அப்துல்கலாம் நினைவு தினம் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்
அப்துல்கலாம் நினைவு தினம் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்
அப்துல்கலாம் நினைவு தினம் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்
ADDED : ஜூலை 28, 2024 03:28 AM
குளித்தலை: குளித்தலை, அக்னி சிறகுகள் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் ஒன்-பதாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது திருஉருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தனர்.
தொடர்ந்து அண்ணா நகர், காவிரி நகர், ரயில்வே நிலையம், பஸ் ஸ்டாண்டு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. உழவர் சந்தை பகுதியில் செயல்பட்டு வரும், தனியார் தொண்டு நிறுவன விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவ, மாணவிகளை ஊக்கு-விக்கும் வகையில் நோட்டு, புத்தகங்கள், பேனா வழங்கப்-பட்டது. பின், மதிய உணவு வழங்கப்பட்டது.
அக்னி சிறகுகள் மக்கள் நல அறக்கட்டளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தனியார் தொண்டு நிறுவன விடுதி நிர்வாகி பழ-னியம்மாள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.