/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டூவீலர் செல்ல வழி விடுமாறு கேட்டவரை தாக்கியவர் கைது டூவீலர் செல்ல வழி விடுமாறு கேட்டவரை தாக்கியவர் கைது
டூவீலர் செல்ல வழி விடுமாறு கேட்டவரை தாக்கியவர் கைது
டூவீலர் செல்ல வழி விடுமாறு கேட்டவரை தாக்கியவர் கைது
டூவீலர் செல்ல வழி விடுமாறு கேட்டவரை தாக்கியவர் கைது
ADDED : ஜூலை 14, 2024 03:21 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டி டி.எம்.எஸ்., நகரை சேர்ந்-தவர் பாசில் உசைன், 39. இவர், பள்ளப்பட்டி தனியார் சூப்பர் மார்க்கெட் எதிரே உள்ள சாலையை மறித்தபடி நின்றுகொண்டு, தகாத வார்த்தையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற, மண்மாரி தெற்கு தெருவை சேர்ந்த ரவிச்சந்-திரன், 55, டூவீலர் செல்ல வழிவிடுமாறு கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பாஷில் உசேன், இரும்பு ராடால் ரவிச்சந்திரனை தாக்கினார்.
இதில், காயமடைந்த ரவிச்சந்திரனை மீட்டு, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து, ரவிச்-சந்திரன் அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் பாஷில் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.