/உள்ளூர் செய்திகள்/கரூர்/ புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 'அம்மா' உணவகம் அமைக்க கோரிக்கை புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 'அம்மா' உணவகம் அமைக்க கோரிக்கை
புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 'அம்மா' உணவகம் அமைக்க கோரிக்கை
புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 'அம்மா' உணவகம் அமைக்க கோரிக்கை
புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 'அம்மா' உணவகம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 08, 2024 05:27 AM
கரூர் : கரூர் அரசு மருத்துவ கல்லுாரியின், புதிய மருத்துவமனையில், 'அம்மா' உணவகம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் நகரின் மையப்பகுதியில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்-துவமனை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கொளந்தா-னுாரில், 300 கோடி ரூபாயில், புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு, கடந்த, 2019ல், அப்போதைய முதல்வர் பழனி-சாமி திறந்து வைத்தார். இதையடுத்து, பழைய மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வந்த தாய்மார்கள், உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு புதிய மருத்துவமனை கட்டடத்-துக்கு மாற்றப்பட்டனர். சித்த மருத்துவ பிரிவை தவிர, பல்வேறு மருத்துவ பிரிவுகளும், புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டன.
இதனால், நாள்தோறும் வெளிப்புற நோயாளிகள், 500க்கும் மேற்பட்டோர் வரை வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளுக்கு, மருத்துவமனை தரப்பில் உணவு வழங்கப்படு-கிறது. ஆனால், வெளிப்புற நோயாளிகள், உள் நோயாளிகளின் உறவினர்கள், பார்வையாளர் புதிய மருத்துவமனைக்கு செல்லும் போது, குறைந்த செலவில் உணவு பொருட்களை வாங்க முடி-யாமல் தவிக்கின்றனர். மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை சுற்றியுள்ள, ஓட்டல்களில் கூடுதல் விலைக்கு, உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், புதிய மருத்-துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், அம்மா உணவகம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.