ADDED : ஜூலை 08, 2024 05:26 AM
கரூர், : தென்னிலை அருகே, மொபட்டை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், தென்னிலை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்-தவர் மோகன் குமார், 35; இவர் கடந்த, 30ல் கரூர் - கோவை சாலை தென்னிலை அருகே, செம்படாம்பாளையம் பிரிவில், 'ஆக்டிவா' மொபட்டை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து, மதன் குமார் சென்று பார்த்த போது, மொபட்டை காண-வில்லை. இதுகுறித்து, மதன் குமார் அளித்த புகார்படி, தென்-னிலை போலீசார், மொபட்டை தேடி வருகின்றனர்.