/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மறைமுக ஆள் குறைப்பு நடவடிக்கை உடற்கல்வி ஆசிரியர் கடும் கண்டனம் மறைமுக ஆள் குறைப்பு நடவடிக்கை உடற்கல்வி ஆசிரியர் கடும் கண்டனம்
மறைமுக ஆள் குறைப்பு நடவடிக்கை உடற்கல்வி ஆசிரியர் கடும் கண்டனம்
மறைமுக ஆள் குறைப்பு நடவடிக்கை உடற்கல்வி ஆசிரியர் கடும் கண்டனம்
மறைமுக ஆள் குறைப்பு நடவடிக்கை உடற்கல்வி ஆசிரியர் கடும் கண்டனம்
ADDED : ஜூலை 08, 2024 05:29 AM
கரூர் : 'புதிய அரசாணை வாயிலாக மறை முக ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது' என, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில பொருளாளர் சதீஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக பள்ளிகளில், 250 மாணவர் களுக்கு ஒரு உடற்கல்வி ஆசியர் என்ற நிலை இருந்து வருகிறது. தற் போது, 700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 251 முதல், 550 மாணவர்களுக்கு கீழ் பயிலும் பள்ளிகளில் இரண்டு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டு வந்ததை, 701 முதல், 1,500 மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு மட்டும், 2 உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் வழங்கப்படும் என, மாற்றப்பட்டுள்ளது.
மேல்நிலை பள்ளிகளில், 400 மாணவர்கள் இருந்தால் ஒரு உடற்கல்வி இயக்குனர் பணியிடம் இருந்து வந்த நிலையில், 701 முதல் 1,500 மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கே உடற்கல்வி இயக்குனர் நிலை - பணியிடம் வழங்கப்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளையாட்டு கனவோடு பயணிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில், 51 அரசு உயர்நிலை பள்ளிகள், 55 அரசு மேல்நிலை பள்ளிகள் என, மொத்தம், 106 அரசு பள்ளிகள் உள்ளன. இதில், 10 பள்ளிகளில் மட்டுமே, 700 மாணவர்களுக்கு மேல் பயின்று வருகின்றனர்.
தற்போது, சதுரங்கம், தடகள போட்டிகள் உள்பட, 24க்கும் மேற்பட்ட வகையான விளை யாட்டு போட்டிகள் நடக்கின்றன. இதற்கு, உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் பயிற்சி அளிக்க வேண்டி உள்ளது. இதை கருத்தில் கொள்ளாமல் தமிழக பள்ளி கல்வித்துறை உடற்கல்வி ஆசிரியர்களை புதிய அரசாணைப்படி மறைமுக ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைவரையும் பாதிக்காத வண்ணம் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.