/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வாய்க்காலில் தண்ணீர் திறப்பு வாழை, வெற்றிலை செழிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறப்பு வாழை, வெற்றிலை செழிப்பு
வாய்க்காலில் தண்ணீர் திறப்பு வாழை, வெற்றிலை செழிப்பு
வாய்க்காலில் தண்ணீர் திறப்பு வாழை, வெற்றிலை செழிப்பு
வாய்க்காலில் தண்ணீர் திறப்பு வாழை, வெற்றிலை செழிப்பு
ADDED : ஜூலை 23, 2024 11:57 PM
கி.புரம் : கட்டளை தென்கரை வாய்க்காலில், பாசன நீர் திறப்பு காரணமாக வாழை, வெற்றிலை பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருகிறது.
கரூர் மாவட்டம், மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து தென்கரை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மாயனுார் முதல், பெட்-டவாய்த்தலை வரை செல்கிறது. வாய்க்காலில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த பாசன தண்ணீர் மூலம், சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, வெற்றிலை பயிர்களுக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக வாய்க்காலில் குறைந்த தண்ணீர் சென்றது. இதனால் பயிர்கள் வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டது. தற்போது வாய்க்கால் தண்ணீரால் வாழை, வெற்றிலை, பயிர்கள் பசுமையாக வளர்ந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால், பயிர்கள் செழிப்பாக வளர்ந்து கூடுதல் மகசூல் கிடைக்கும் என
விவசாயிகள் கூறினர்.