ADDED : ஜன 06, 2024 10:44 AM
கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி கடை வீதியில், உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி தலைமை வகித்தார். க.பரமத்தி பகுதியில், உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும். சாலையோரத்தில் புதைவடம் கேபிள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட, 63 கோரிக்கை மனுக்களை, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேலிடம் வழங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், பொருளாளர் சுப்ரமணி, சி.ஐ.டி.யு., சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.