Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சுதாகர் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சுதாகர் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சுதாகர் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சுதாகர் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கம்

ADDED : ஜன 08, 2025 09:25 AM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள 103வது வட்டச் செயலாளர் சுதாகர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க., 103வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள 103வது வட்டச் செயலாளர் சுதாகர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம், அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த ப. சுதாகர், (103 வடக்கு வட்டக் கழகச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us