/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 17, 2024 08:52 AM
கரூர், : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர் மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட தலைவர் ஜீவா-னந்தம் தலைமையில், வெண்ணைமலை தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், முறைசார தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த, 70 லட்சம் தொழிலாளர்களின் தரவுகளை மீட்க நட-வடிக்கை எடுக்க வேண்டும், ஆன்லைன் செயலி செயல்படும் வரை, நேரடியாக மனுக்களை பெற வேண்டும், மகளிர் உரிமை தொகையை காரணம் காட்டி, நலவாரிய ஓய்வூதியத்தை நிறுத்தக் கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியு-றுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செய-லாளர் முருகேசன், நிர்வாகிகள் ராஜா முகமது, சுப்பிரமணியன், சரவணன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.