/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் அருகே கஞ்சாவைத்திருந்த 3 பேர் கைது கரூர் அருகே கஞ்சாவைத்திருந்த 3 பேர் கைது
கரூர் அருகே கஞ்சாவைத்திருந்த 3 பேர் கைது
கரூர் அருகே கஞ்சாவைத்திருந்த 3 பேர் கைது
கரூர் அருகே கஞ்சாவைத்திருந்த 3 பேர் கைது
ADDED : மார் 18, 2025 01:42 AM
கரூர் அருகே கஞ்சாவைத்திருந்த 3 பேர் கைது
கரூர்:கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே தட்டாங்காடு பகுதியில், சிலர் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம், தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேலாயுதம்பாளையம் போலீஸ் எஸ்.ஐ., சுபாஷினி உள்ளிட்ட போலீசார், தட்டாங் காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்ப ட்டனர்.
அப்போது, புகழூரை சேர்ந்த ரகுமான், 25; மேல் ஒரத்தை பகுதியை சேர்ந்த ரூபன் குமார், 26; வேலாயுதம்பாளையம் காந்தி நகரை சேர்ந்த பிரசாந்த், 24; ஆகிய மூன்று பேரும், கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மூன்று பேரையும், வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, இரண்டே கால் கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.