Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கர்நாடகாவில் கோழி தீவனம் வாங்க வேண்டாம்கரூர் கலெக்டர் எச்சரிக்கை

கர்நாடகாவில் கோழி தீவனம் வாங்க வேண்டாம்கரூர் கலெக்டர் எச்சரிக்கை

கர்நாடகாவில் கோழி தீவனம் வாங்க வேண்டாம்கரூர் கலெக்டர் எச்சரிக்கை

கர்நாடகாவில் கோழி தீவனம் வாங்க வேண்டாம்கரூர் கலெக்டர் எச்சரிக்கை

ADDED : மார் 18, 2025 01:44 AM


Google News
கர்நாடகாவில் கோழி தீவனம் வாங்க வேண்டாம்கரூர் கலெக்டர் எச்சரிக்கை

கரூர்:'கர்நாடகாவில் இருந்து வாத்து, கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டை, கோழி தீவனம், தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்க கூடாது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: கர்நாடகா மாநிலம் பெல்லாரி, சிக்பல்லாப்பூர் மாவட்டங்களில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை. இந்நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீர்பறவைகள் மற்றும் வன பறவைகள் ஆகியவற்றை முக்கியமாக தாக்கும்.

நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள், கோழி தீவனம் மூலமாக இந்நோய் பரவுகிறது. இந்நோய்க்கு சிகிச்சை எதுவும் இல்லை. நோய் வராமல் தடுக்க நோய் தடுப்பு முறைகளையும், உயிர் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும்.

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் அனைத்து கோழிப்பண்ணைகள் மற்றும் புறக்கடைக்கோழிகளில் நேரில் பார்வையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கர்நாடகாவில் இருந்து வாத்து, கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டை, கோழி தீவனம், தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்க கூடாது. கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக கர்நாடகாவில் இருந்து குஞ்சு பொறிப்பதற்கான முட்டைகள், வாத்துகள் மற்றும் கோழிகள் ஏதேனும் வாங்கப்பட்டிருந்தால், அவற்றை கண்டறிந்து அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கோழிப்பண்ணைகளுக்குள் செல்பவர்களும், வெளியே வருபவர்களும் கிருமி நாசினியால் கால்களை சுத்தம் செய்த பின்னரே செல்ல வேண்டும். பண்ணையில் இறந்த கோழிகளை உடனுக்குடன் முறையாக கோழி இறப்பு குழியில் கிருமிநாசினி தெளித்து புதைக்க வேண்டும்.

இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us