/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் ஆண்டு சராசரியை விட கூடுதல் மழைகோடையில் குடிநீர் பிரச்னை சமாளிக்க முடியுமா? கரூரில் ஆண்டு சராசரியை விட கூடுதல் மழைகோடையில் குடிநீர் பிரச்னை சமாளிக்க முடியுமா?
கரூரில் ஆண்டு சராசரியை விட கூடுதல் மழைகோடையில் குடிநீர் பிரச்னை சமாளிக்க முடியுமா?
கரூரில் ஆண்டு சராசரியை விட கூடுதல் மழைகோடையில் குடிநீர் பிரச்னை சமாளிக்க முடியுமா?
கரூரில் ஆண்டு சராசரியை விட கூடுதல் மழைகோடையில் குடிநீர் பிரச்னை சமாளிக்க முடியுமா?
ADDED : மார் 18, 2025 01:43 AM
கரூரில் ஆண்டு சராசரியை விட கூடுதல் மழைகோடையில் குடிநீர் பிரச்னை சமாளிக்க முடியுமா?
கரூர்:கரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சராசரி மழையை விட, அதிகம் பெய்துள்ளதால் குடிநீர் பிரச்னை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் உள்ளனர்.
தமிழகத்தில் குறைந்தளவில் மழை பெய்யும், மாவட்டங்களில் கரூரும் ஒன்று. வழக்கமாக கரூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, 652.20 மி.மீ., மழை சராசரியாக பெய்ய வேண்டும். கடந்தாண்டு, 772.20 மி.மீ., மழை பெய்தது.
கடந்த 2022ல் 723.32 மி.மீ., மழையும், 2023 ல் 548.88 மி.மீ., மழை பெய்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு, 772.30 மி.மீ., மழை பெய்துள்ளது.
இதில், 2023விட கூடுதலாக, 223.42 மி.மீ., கடந்த 2024ல் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரி மழையளவு விட, 18 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. தென் மேற்கு பருவமழை சராசரியை விட, 37.88 மி.மீ., குறைவாகவும், வடகிழக்கு பருவமழை சராசரியை விட, 135.54 மி.மீ., கூடுதலாக பெய்ந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் காவிரியாறு மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதிகளை தவிர்த்து மானாவாரி நிலங்களை நம்பி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் அதிகளவில் எண்ணை வித்து பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.
நடப்பாண்டு சராசரி மழையளவை விட அதிகமாக மழை பெய்ததால் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. இதனால் கோடையில் குடிநீருக்கு பிரச்சனையின்றி சமாளிக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.