/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/காதல் மனைவியை காரில் இழுத்து சென்றவர் கைதுகாதல் மனைவியை காரில் இழுத்து சென்றவர் கைது
காதல் மனைவியை காரில் இழுத்து சென்றவர் கைது
காதல் மனைவியை காரில் இழுத்து சென்றவர் கைது
காதல் மனைவியை காரில் இழுத்து சென்றவர் கைது
ADDED : ஜன 06, 2024 01:15 PM
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே அணைக்கரையைச் சேர்ந்தவர் அபிஷா, 23, பட்டதாரி. முதலாறு பகுதியைச் சேர்ந்தவர் பெர்லின், 27. இருவரும் காதலித்து 2021-ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு, 82 சவரன் நகை, 9 லட்சம் ரூபாய், கார் உள்ளிட்ட சீர்வரிசைகள் தரப்பட்டன. ஒன்றரை வயதில் இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிப்ரவரி முதல் பிரிந்து வாழ்கின்றனர். அடிக்கடி அபிஷா வீட்டுக்கு சென்று பெர்லின் தகராறு செய்து வந்தார். இது தொடர்பாக குழித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, அபிஷா அப்பகுதியில் உள்ள கல்லுாரியில் பி.எட்., படிக்க ஸ்கூட்டரில் சென்று வந்தார். நேற்று முன்தினம் அருவிக்கரை பாலம் பகுதியில் அபிஷாவின் ஸ்கூட்டரை வழிமறித்து காரை நிறுத்திய பெர்லின், ஸ்கூட்டர் சாவியை பறித்து காரில் புறப்பட்டார்.
சாவியை வாங்குவதற்காக அபிஷா முயன்ற போது, அவரது கையைப் பிடித்து இழுத்தபடி காரை ஓட்டினார். இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் காரை துரத்தியபோது, அபிஷாவின் கையை விட்டு, காரை வேகமாக ஓட்டிச் சென்றார். கீழே விழுந்த அபிஷா படுகாயம் அடைந்து, குலசேகரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குலசேகரம் போலீசார் பெர்லினை நேற்று கைது செய்தனர்.