/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/சொத்தில் பெயர் மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ. கைதுசொத்தில் பெயர் மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது
சொத்தில் பெயர் மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது
சொத்தில் பெயர் மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது
சொத்தில் பெயர் மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது
ADDED : ஜன 13, 2024 01:10 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளையைச் சேர்ந்தவர் டேவிட் மனோகரன். குலசேகரம் அருகே பொன்மனையில் மனைவி பெயரில் உள்ள சொத்தில் பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் ரவியிடம் மனு செய்தார். அவர் ஒரு மாதமாக மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது சம்பந்தமாக கேட்டபோது சொத்து பெயர் மாற்றத்திற்கு 5,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என ரவி கூறினார். இதுகுறித்து டேவிட் மனோகரன் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி டேவிட் மனோகரன் பணத்தை ரவியிடம் கொடுத்தார். அப்போது ரவியை போலீசார் கைது செய்தனர்.