/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/பகவதி கோவிலுக்கு வாடகை பாக்கி : முதல் தவணை செலுத்தியது பூம்புகார்பகவதி கோவிலுக்கு வாடகை பாக்கி : முதல் தவணை செலுத்தியது பூம்புகார்
பகவதி கோவிலுக்கு வாடகை பாக்கி : முதல் தவணை செலுத்தியது பூம்புகார்
பகவதி கோவிலுக்கு வாடகை பாக்கி : முதல் தவணை செலுத்தியது பூம்புகார்
பகவதி கோவிலுக்கு வாடகை பாக்கி : முதல் தவணை செலுத்தியது பூம்புகார்
ADDED : பிப் 06, 2024 03:08 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வழங்க வேண்டிய வாடகை பாக்கியில், முதல் தவணையை தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நேற்று செலுத்தியது. கோவிலுக்கு சொந்தமான அடிமனையில் பூம்புகார் போக்குவரத்து கழக நிறுவனம் செயல்படுகிறது. 1984-ல் இதற்காக வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டது.
வாடகையாக 2018 ஜனவரி முதல் தேதி வரை, 34 ஆண்டு காலத்துக்கு பூம்புகார் போக்குவரத்து கழக நிறுவனம், 2.32 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.
கோவில் நிர்வாகம் சார்பில் பூம்புகார் நிறுவனத்துக்கு பல கடிதங்கள் எழுதியும் பலன் இல்லை. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், வாடகை பாக்கியை உடனே செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிறுவனம், கோவிலுக்கு தர வேண்டிய வாடகை பாக்கி தொகையில் முதல் தவணையாக, 84.70 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கோவில் நிர்வாகத்திடம் நேற்று வழங்கியது.
விவேகானந்தர் பாறைக்கு படகுகளை இயக்கும் இந்த அரசு நிறுவனமே, கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, பணம் செலுத்தாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.