/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/புத்தாண்டு பைக் ரேஸ் ஐ.டி.ஐ., மாணவர் பலிபுத்தாண்டு பைக் ரேஸ் ஐ.டி.ஐ., மாணவர் பலி
புத்தாண்டு பைக் ரேஸ் ஐ.டி.ஐ., மாணவர் பலி
புத்தாண்டு பைக் ரேஸ் ஐ.டி.ஐ., மாணவர் பலி
புத்தாண்டு பைக் ரேஸ் ஐ.டி.ஐ., மாணவர் பலி
ADDED : ஜன 02, 2024 11:19 PM
குலசேகரம்:குலசேகரத்தில் புத்தாண்டை முன்னிட்டு பைக் ரேஸில் பங்கேற்ற வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் இட்டகவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் அனிஷ்,19. ஐ.டி.ஐ., மாணவர். இவரது நண்பர் நாகக்கோடு பகுதியைச் திபு,20. இருவரும் 31ம் தேதி இரவு பைக் ரேஸ் சென்றனர்.
குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறை சென்றபோது தும்பக்கோடு பஸ் ஸ்டாண்ட் அருகே அதிவேகமாக வந்த பைக், ரோட்டோர தென்னை மரத்தில் மோதியது. தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
குலசேகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அனிஸ் மரணம் அடைந்தார். திபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.