/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி
மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி
மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி
மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி
ADDED : செப் 19, 2025 07:38 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரியில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஓமியோபதி மருத்துவ மாணவி இறந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், பள்ளம் மேகானிம் நகரை சேர்ந்தவர் இருதய ஜான், 54; அரசு போக்குவரத்து கழக மெக்கானிக். இவரது மகள் ஜினி தெரசா, 22; திருவட்டார் அருகே உள்ள ஓமியோபதி கல்லுாரியில் நான்காம் ஆண்டு மாணவி.
கடந்த, 15ல் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அப்பகுதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்தது. இதனால், அவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். என்ன வகை காய்ச்சலால் அவர் இறந்தார் என சுகாதார அதிகாரிகள், சுசீந்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.