/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ மருமகள் காதை கடித்த மாமியார் மீது வழக்கு மருமகள் காதை கடித்த மாமியார் மீது வழக்கு
மருமகள் காதை கடித்த மாமியார் மீது வழக்கு
மருமகள் காதை கடித்த மாமியார் மீது வழக்கு
மருமகள் காதை கடித்த மாமியார் மீது வழக்கு
ADDED : செப் 19, 2025 03:20 AM

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் வியன்னூர் அருகே சாய்கோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மனைவி அல்போன்சா 55. இவர்களது மகன் பிரின்ஸ். அவரது மனைவி மஞ்சு. பிரின்சுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்படுவது வழக்கம்.
மஞ்சு தனது கணவர் பற்றி பேசினால் மகனை தவறாக பேசாதே என்று மருமகளிடம் அல்போன்சா சண்டை போடுவாராம்.
நேற்று முன்தினம் மாலை பிரின்ஸ் மற்றும் மஞ்சு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மஞ்சுவுடன் அல்போன்சா தகராறில் ஈடுபட்டதோடு கல்லால் அவரது முகத்தில் அடித்து காதை கடித்துள்ளார்.
அக்கம்பக்கம் உள்ளவர்கள் மஞ்சுவை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மஞ்சு புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.