/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் படகு போக்குவரத்துபொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் படகு போக்குவரத்து
பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் படகு போக்குவரத்து
பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் படகு போக்குவரத்து
பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் படகு போக்குவரத்து
ADDED : ஜன 04, 2024 01:06 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் போக்குவரத்துக் கழக படகுகளில் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். வழக்கமாக காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இந்த படகு போக்குவரத்து நடக்கிறது.
ஜன., 14 முதல் பொங்கல் விடுமுறை துவங்கவுள்ளதால் இந்த நாட்களில் கூட்டம் மிக அதிகம் காணப்படும். எனவே ஜன.,14 முதல் 17 வரை 4 நாட்கள் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை படகு போக்குவரத்து நடக்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.