/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ பெண் போலீசுக்கு மிரட்டல் வழக்கறிஞர் மீது வழக்கு பெண் போலீசுக்கு மிரட்டல் வழக்கறிஞர் மீது வழக்கு
பெண் போலீசுக்கு மிரட்டல் வழக்கறிஞர் மீது வழக்கு
பெண் போலீசுக்கு மிரட்டல் வழக்கறிஞர் மீது வழக்கு
பெண் போலீசுக்கு மிரட்டல் வழக்கறிஞர் மீது வழக்கு
ADDED : ஜூன் 11, 2025 02:54 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் பெண் போலீஸ் சபீனாவுக்கு மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் ஜஸ்டின் 35, மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிபவர் சபீனா.
இவர் நீதிமன்ற வழக்குகளை கவனித்து வருகிறார். நேற்று முன் தினம் வழக்குகள் தொடர்பான கோப்புகளுடன் பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் எண் 2 நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
அங்கு வந்த வழக்கறிஞர் ஜஸ்டின் தன்னை தடுத்து நிறுத்தி அவதூறாக பேசியதுடன் வழக்கு கோப்புகளை பிடுங்கி எறிந்து இனி நீதிமன்றத்துக்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக சபீனா தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
எஸ்.ஐ., இமானுவேல் மற்றும் போலீசார் விசாரித்து ஜஸ்டின் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.