/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ கடலில் விழுந்து பலியான வாலிபர் உடல் மீட்பு கடலில் விழுந்து பலியான வாலிபர் உடல் மீட்பு
கடலில் விழுந்து பலியான வாலிபர் உடல் மீட்பு
கடலில் விழுந்து பலியான வாலிபர் உடல் மீட்பு
கடலில் விழுந்து பலியான வாலிபர் உடல் மீட்பு
ADDED : ஜூலை 26, 2024 12:20 AM
நாகர்கோவில்:கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே ஆழிமலையை சேர்ந்தவர் அஜித், 28. இவர், ஜூலை 14-ல் விழிஞ்ஞம் கடற்கரையில் ஒரு பாறையில் அமர்ந்து கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்தார்.
பெரிய அலையில் சிக்கிய இவரை கடலோர காவல் படையினரும், உள்ளூர் மீனவர்களும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், 70 கி.மீ., துாரம் கடந்து கன்னியாகுமரி அருகே கீழமணக்குடி அந்தோணியார் குருசடி அருகே உள்ள கடற்கரையில் ஒரு உடல் ஒதுங்கியது. விசாரணையில் கடலில் மூழ்கிய அஜித் என்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.