/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ முன்னாள் நிர்வாகி கொலை; காங்., எம்.எல்.ஏ.,க்கள் மறியல் முன்னாள் நிர்வாகி கொலை; காங்., எம்.எல்.ஏ.,க்கள் மறியல்
முன்னாள் நிர்வாகி கொலை; காங்., எம்.எல்.ஏ.,க்கள் மறியல்
முன்னாள் நிர்வாகி கொலை; காங்., எம்.எல்.ஏ.,க்கள் மறியல்
முன்னாள் நிர்வாகி கொலை; காங்., எம்.எல்.ஏ.,க்கள் மறியல்
ADDED : ஜூலை 29, 2024 11:03 PM

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மூவாற்றுமுகம் குன்னத்து விளையைச் சேர்ந்தவர் ஜாக்சன் 38. திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர். மனைவி உஷா குமாரி. திருவட்டார் பேரூராட்சி பத்தாவது வார்டு காங்., கவுன்சிலராக உள்ளார்.
இரு தினங்களுக்கு முன் ஜாக்சன் அந்தப் பகுதியில் உள்ள சர்ச் அருகே நின்று கொண்டிருந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் சரமாரியாக வெட்டினர். படுகாயம் அடைந்த ஜாக்சன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
நேற்று இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலையாளிகளை கைது செய்ய கோரி திருவட்டார் - பேச்சிப்பாறை ரோட்டில் நேற்று காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்., எம்.எல்.ஏ.,க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட் உட்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.