/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தொழிற்சாலையில் மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி தொழிற்சாலையில் மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
தொழிற்சாலையில் மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
தொழிற்சாலையில் மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
தொழிற்சாலையில் மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
ADDED : ஜூன் 29, 2025 09:43 PM
ஸ்ரீபெரும்புதுார்:இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில், தரையை சுத்தம் செய்த போது, முதல் தளத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், குரண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ், 37. செம்பரம்பாக்கத்தில் தங்கி, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அவுஸ்கீப்பராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை தொழிற்சாலையின் முதல் தளத்தில் தரையை சுத்தம் செய்யும் போது, எதிர்பாராத விதமாக, நிலைத் தடுமாறி விழுந்தார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.