Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் மகளிர் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் மகளிர் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் மகளிர் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் மகளிர் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

ADDED : ஜூன் 29, 2025 09:37 PM


Google News
காஞ்சிபுரம்:மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க, 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு, பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்த புதிய திட்டத்தை சமூகநலத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

மகளிருக்கு 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5,000 ரூபாய் மானிய தொகையாக இத்திட்டத்தில் வழங்கப்படும்.

இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழகத்தில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று. ஆண்டு வருமான வரம்பு 1.20 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை, ஜூலை 14 க்குள், மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us