/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தொழிற்சாலையில் இரும்பு தகடு வெட்டி தொழிலாளி உயிரிழப்பு தொழிற்சாலையில் இரும்பு தகடு வெட்டி தொழிலாளி உயிரிழப்பு
தொழிற்சாலையில் இரும்பு தகடு வெட்டி தொழிலாளி உயிரிழப்பு
தொழிற்சாலையில் இரும்பு தகடு வெட்டி தொழிலாளி உயிரிழப்பு
தொழிற்சாலையில் இரும்பு தகடு வெட்டி தொழிலாளி உயிரிழப்பு
ADDED : மே 25, 2025 07:44 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் திப்பு குமார், 22. ஸ்ரீபெரும்புதுார் அருகே, மண்ணுாரில் தங்கி, அதே பகுதியில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், இம்மாதம் 23ம் தேதி இரவு, திப்பு குமார் பணியில் ஈடுபட்டிருந்த போது, தொழிற்சாலையில் இயந்திரத்தில் இருந்த, இரும்பு திப்பு குமார் வயிற்றில் வெட்டியது.
இதில் பலத்த காயமடைந்த திப்புகுமாரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.